இந்துவின் மைந்தனுக்கு இதய அஞ்சலிகள்.

Friday, August 3, 2007 - - 13 Comments


வணக்கம்,
எல்லோருக்கும் கொழும்பு வாழ்க்கை பழகிப்போயிருக்கும்.சுமூகமான இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஆனால் இது இன்னமும் எத்தனை நாட்களுக்கு என்பது கேள்விக்குறியே? அர்த்தமற்ற போலித்தனமான வாழ்க்கைக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.
கண்ணிருந்தும் குருடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் வாழ்ந்தால் இறுதியில் எஞ்சப்போவது என்ன? சற்று சிந்திப்போம்.
நமது தோழர்கள், ஒன்றாக படித்தவர்கள் தமது உயிர்களை வீணாக காவுகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவை நிறுத்தப்படவேண்டும். இந்த வரிசையில் நேற்றைய தினம் பலியெடுக்கப்பட்டவன் எனது நண்பன், இந்துவின் மைந்தன், சிறந்த பேச்சாளன், வளர்ந்துவரும் ஊடகவியலாளன். மொத்தத்தில் நாட்டுக்குத் தேவையானவன்.
அதீத திறமைகளை தன்னுள் புதைத்திருந்த ஒரு இளம் மேதை அநியாயமாக அழிக்கப்பட்டிருக்கிறான். இவன் செய்த தவறென்ன? அடிமைப்பட்ட தனது இனத்தின் மீது பற்று வைத்திருந்தான். கல்லூரியில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியின் மூலம் அதனை வெளிப்படுத்தினான். இது தவறா?
இது ஒவ்வொரு தமிழனினுள்ளும் புதைந்துள்ள உணர்வு.அவ்வாறெனில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்களா?இவன் மட்டுமல்ல குடாநாட்டில் எஞ்சியிருந்த இளைஞர்களில் பாதிப்பேர் இன்று இல்லை.நாம் நாடுதிரும்பும் போது காணப்போவது வெறும் சுடுகாட்டையா?
என்னைப் பொறுத்தளவில் இது ஒரு திட்டமிட்ட இன ஒழிப்பு.நாட்டிலுள்ள சிறுபான்மை இனமொன்றை அழித்து அதன் வெற்றியை கொண்டாடினார்கள் அண்மையில். நாமெல்லாம் வெடிகொளுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
சற்று சிந்திக்க ஆரம்பிப்போம்.கேளிக்கைகள், விருந்துகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு ஒதுக்கும் நேரத்தை சற்று நாட்டுக்காகவும் ஒதுக்குவோம். இங்கே எந்தவித கவலையுமில்லாமல் உலாவும் வெள்ளவத்தை தமிழர்களை நாம் திருத்தமுடியாது.இவர்களெல்லாம் 83இல் நடந்தது போல் தாய்நிலத்துக்கு அகதிகளாக அனுப்பப்படும் போது உணர்ந்துகொள்ளவார்கள்.எனது விருப்பமும் அதுவே.இங்கே ஆடம்பரமாக வாழ்பவர்கள் அங்கு வந்து பாடசாலை வகுப்பறைகளில் குடும்பம் நடத்தி தமிழனின் துயரங்களை அறியவேண்டும்.
நாம் என்ன செய்யலாம் என்பதை சிந்தித்து இவ்வாறு பின்னூட்டங்களின் மூலம் பரிமாறுங்கள். எதைப்பற்றியும் பயப்படத்தேவையில்லை.பயப்பட்டதெல்லாம் போதும். கோழைத்தனமாக "ஏன் வீண்வம்பு?" என ஒதுங்கியிருக்காதீர்கள்.
சாவு என்பது ஒருமுறைதானே.ஆனால் வீணே சாவதை தவிர்த்து குறைந்தது 10 களைகளையாவது களைந்துவிட்டு சாவதே மேல். நாம் வாழும், வாழப்போகும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பொம்.

This entry was posted on 1:38 PM You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

மாயா said...

தொடந்தும் எழுதுங்கள் . . .

கோவையூரான் said...

தங்கள் ஆதரவுக்கு நன்றி மாயா.

Anonymous said...

stupid. U mind ur own business.

காண்டீபன் said...

தொடர்ந்து எழுதுங்கள்...
தமிழன் இனப்பற்றை வெளிப்படுத்த வேண்டிய நேரமிது.

Anonymous said...

தாய் மண் பற்றிய கனவுகளோடு சொந்த மண்ணில் விதைக்கப்பட்ட எம் பாசமிகு நண்பனின் புகழை
உங்கள் பதிவுகளில் காண்பது மீண்டும் பழைய நினைவுகளுள் என்னை இழுக்கிறது.
ஆளுமையும் ஆற்றலும் துடிப்பும் மிக்க ஒரு தலைவன் முளையிலேயே கிள்ளப்பட்டிருக்கிறான்.
உங்கள் கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன்.

சாபங்களிலிருந்து மீள முடியாமல் செத்துக்கொண்டிருப்பது தேசம் மட்டுமல்ல மனிதமும் தான்.
யாழ் பெரும்பகுதி இளைய சமுதாயம் வெளியேற்றப்பட்டும் மீதியின் குரல்வளைகள் நசுக்கப்பட்டும் போன காலப்பகுதியில் நம்மை விட்டுப்போய் விட்ட நண்பன் நிலாவின் இறுதிச் சடங்கில், எண்ணிப்பார்த்தேன் நாலைந்து இளைஞர்கள் மட்டும்....!

ஆனால் நான் அறிவேன் அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் இதயங்கள் அதிகம்...


இதுவே 2 வருடங்களின் முன் நிகழ்ந்திருந்தால்.....?


கல்லூரியில் அவன் அடிக்கடி சொல்வான்..,
"தூயவர்கள் துணிந்து விட்டால் பகை வந்து சேர்வதில்லை"

என்ன செய்யப்போகிறோம்?
எங்கிருந்து செய்யப்பொகிறோம்? எவ்வளவு செய்யப்போகிறோம்?

கருத்தை கருத்தால் எதிர்க்க முடியாத, பேனாவை பேனாவால் எதிர்கொள்ள முடியாத இந்த கோழைத்தனமான கேடு கெட்ட கலாசாரத்தின் உருவாக்கத்திற்கு யார் யாரெல்லாம் பொறுப்பாளிகள்?

Anonymous said...

"Anonymous said...

stupid. U mind ur own business."


முட்டாளின் ப‌திவு குறித்து க‌வ‌லைப் ப‌ட‌வேண்டாம்.


உங்க‌ள் ந‌ண்ப‌னின் க‌ன‌வை அனைவ‌ரும் நிறைவேற்ற‌ வேண்டும்.

புள்ளிராஜா

பாரதி தம்பி said...

வாழ்வின் வலிகளை தொடர்ந்து வலையேற்றுங்கள். செயல்கள் ஒரு பக்கமிருக்க, இவ்வாறான எழுத்துக்களும் இங்கு அவசியமே..

Anonymous said...

தோழா,
வீரம் தேவை. ஆனால் விவேகமும் தேவை. கோழைகள் உன்னை பலிக்கடாவாக்கலாம்.உன் நண்பனைப் போல் நீயும் பலியாகாதே.உன் நண்பனின் கனவு அதுவல்ல.புரிந்துகொள். தேசம் உன்னை மட்டும் நம்பியல்ல, ஆனால் உன்னை மட்டும் நம்பியிருப்பவர்கள்???? . யார் பார்ப்பது.

கோவையூரான் said...

//ஆழியூரான். said...
வாழ்வின் வலிகளை தொடர்ந்து..//

வணக்கம் ஆழியூரான்!
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
வடுக்கள் இருக்கும் வரை வலிகளைத் தொடர்ந்து வலையேற்றுவேன்.
நன்றி.

கோவையூரான் said...

//காண்டீபன் said...
தொடர்ந்து எழுதுங்கள்...//

வணக்கம் காண்டீபன்!
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
தொடர்ந்தும் வருக.

Chayini said...

//இங்கே எந்தவித கவலையுமில்லாமல் உலாவும் வெள்ளவத்தை தமிழர்களை நாம் திருத்தமுடியாது.இவர்களெல்லாம் 83இல் நடந்தது போல் தாய்நிலத்துக்கு அகதிகளாக அனுப்பப்படும் போது உணர்ந்துகொள்ளவார்கள்.எனது விருப்பமும் அதுவே.இங்கே ஆடம்பரமாக வாழ்பவர்கள் அங்கு வந்து பாடசாலை வகுப்பறைகளில் குடும்பம் நடத்தி தமிழனின் துயரங்களை அறியவேண்டும்.
//

உங்கள் மற்றைய கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.

ஆனால் தடித்த எழுத்தில் இருப்பதைச் சற்றுக் கவனியுங்கள்.. வெள்ளவத்தையில் இப்போது இருக்கும் தமிழர்கள் அனைவரிடத்திலும் கண்டிப்பாக ஒரு கதை இருக்கும். வடுக்களோடு வாழ்ந்து கொண்டிருப்போரே பலர்...
வெள்ளவத்தை தமிழருக்கா கவலையில்லை... கவலைப்படக் கூட நேரமின்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் பலர்...
பாடசாலை வகுப்பறையில் மட்டுமல்ல மரத்து நிழலிலும் ஏன் ஒதுங்க இடமின்றி வாழ்ந்தவர்களும் கூட வெள்ளவத்தை தழிழர்களாய் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. நீங்கள் சொல்வது போன்றவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அது வெகு சிலரே.. அவர்களுக்குள்ளும் கூட வடுக்கள் நிறைந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை..
கேளிக்கை, களியாட்டங்களில் ஈடுபடுவோராக கூட இருக்கலாம். இருந்தாலும் தப்பில்லை என்பது என் கருத்து...

நாளைய நாள் எப்படி விடியுமோ என்று தெரியாமல் வாழ்பவன் தான் தமிழன்.. போராட்டத்தில் பங்கு கொள்ளாத வரை எந்த நேரமும் ஏன் அழுது கொண்டிருக்க வேண்டும்..

வாழும் இந்த நிமிடத்தை சந்தோசமாக வாழ்ந்து விட்டுப் போகலாமே..

மற்றும்படி பதிவர் உலகத்தில் நுழைந்தமைக்கு வாழ்த்துக்கள்.:)

கோவையூரான் said...

அம்மா பாவை !

நீங்கள் சொல்வது போன்றவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அது வெகு சிலரே..

எனவே நான் எழுதியிருப்பது யாருக்கென உங்களுக்கு தெளிவாக புரிகிறது.
என்னைப் பொறுத்தவரைக்கும் உணர்வுகளுடன் இருப்பவர்கள் தான் சிலர். பலர் நான் விமர்சித்த திமிர்பிடித்த வெள்ளவத்தை தமிழர்களே என்பது மறுக்கமுடியாத உண்மை.

Anonymous said...

"தூயவர்கள் துணிந்து விட்டால் பகை வந்து சேர்வதில்லை"
ழுதுங்கள்

தொடந்தும் எழுதுங்கள் . . .