கையில காசு வாயில தோசை.

Friday, August 17, 2007 - - 4 Comments



இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்களின் வாழ்க்கை எவ்வாறிருக்கிறது என்பதை அலசும்போது அந்ந அவலங்களையெல்லாம் கொட்டி ஒரு நூல் வெளியிடலாம் போலுள்ளது.இந்த அவலங்களெல்லாம் நான் எனது முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டது போல ஆடம்பர வாழ்க்கை வாழும் கொழும்புத் தமிழர்களுக்கல்ல. மாறாக சொந்த மண்ணை விட்டுவந்து கல்வித்தேவைக்காகவும், வேலைவாய்ப்புக்களுக்காகவும் கொழும்பில் வதியும் பிறமாவட்ட தமிழர்களுக்கேயாகும். எத்தனையோ பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இவர்களது வாழ்க்கை போராட்டமயமானதாகவே இருந்துவருகிறது.முன்னரெல்லாம் காரணமில்லாமல் தங்கியிருப்பவர்களுக்கத்தான் இத்தகைய கெடுபிடிகள் இருந்துவந்தது. ஆனால் இப்போதெல்லாம் நிலமை அவ்வாறில்லை.நேற்றையதினம் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நேற்று அதிகாலை எனது நண்பனொருவன் பொலிஸ் பதிவு இல்லாமல் தங்கியிருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தான். எனது சகமாணவர்கள் சென்று விடுவிப்பதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தும் மாலைவரை அவன் விடுவிக்கப்படவில்லை. முடியாது எனக் கூறாமல் சிறிது நேரத்தில் விடுகிறோம் என இழுத்தடித்துக்கொண்டிருந்தார்கள்.மாலையில் நானும் சக நண்பர்களும் சென்றபோதும் நிலமை அவ்வாறே இருந்தது.இந்த முயற்சி பலனளிக்காது என்ற முடிவுக்கு வந்த நாங்கள் பொலிசாருடன் தொடர்புடைய ஒருவர் மூலம் அணுகினோம். பிரச்சினை சுலபமானது. வெளியில் வந்தவர் கூறினார். "விடுவார்கள் பிரச்சினையில்லை. நாலு போத்தல் வாங்கி கொடுத்தால் போதுமாம்.". பிறகென்ன !
வேலைகள் துரிதமாக நடந்தன. நண்பன் வெளியில் வந்தான்(வெளியேற்றப்பட்டான்).
இந்ந சம்பவம் எடுத்துக்காட்டுவது எதனை?
கொழும்புப் பாதுகாப்பிலுள்ள ஓட்டையையா? அதாவது பொலிசாரின் "கையில காசு வாயில தோசை" எனும் பாணியிலான செயற்பாட்டையா?
அல்லது வாயிருந்தும் ஊமைகளாக செய்யாத குற்றத்துக்காக சிறை சென்று லஞ்சம் கொடுத்து வெளிவரும் தமிழர்களின் இயலாமையையா?
விடைகாணத் தயங்காதீர்கள். இவற்றுக்கெல்லாம் நாமே தீர்ப்பெழுத வேண்டிய காலமிது. லஞ்சத்தைப்பற்றிக்கூட கவலைப்படத்தேவையில்லை.ஏனெனில் நடந்தது எமது தேசத்திலல்ல. வாங்கியவனும் தமிழனல்ல. கொடுத்தவன்தான் தமிழன்.
குற்றமே செய்யாத ஒரு தமிழனை வெளியே கொண்டுவருவதற்கு இப்படியொரு வழி இருக்கும்போது அதனை பயன்படுத்துவதில் தவறில்லை.
இங்கெ தவறுகளெதுவும் நமதல்ல.
எம்மை நசுக்கி தங்களை வளர்த்தக்கொள்ளும் சிங்கள பாதகர்களின் தவறுகளே தவறுகள்.ஆனால் தாங்கள் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு இன்றைக்கு விளங்காத போதும் என்றோ ஒருநாள் ஒட்டுமொத்த சிங்கள சமூகமும் இதற்கெல்லாம் பதில் கூறியே ஆகவேண்டும்.

This entry was posted on 2:45 AM You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

Anonymous said...

கொடுப்பவர்கள் இருக்கும் வரை, வாங்குபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

Anonymous said...

I guess money talks all over.

Rumya

Chayini said...

பொலீசார் குறிப்பாக வெள்ளவத்தைப் பொலீசார் காசு உழைக்கும் இலகு வழியொன்றைக் கண்டு பிடித்துள்ளார்கள்..

அண்மையில் என் உறவுக்காரன் உட்பட எட்டுப் பேரை ஒருமிக்கப் பிடித்த பொலீசார் தலைக்கு 4000 என மொத்தமாக 32 000 வாங்கி விட்டு எந்தப் பதிவுமில்லாமல் விட்டிருக்கிறார்கள்.

அதே சமயம் நிறைய பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவனை தனக்கும் ஒரு சிறிய தொகை தர சொல்லி கேட்டு மறுத்ததனால், உள்ளே போட்டு மூன்று வாரங்களாக அலைய விட்டு பலத்த பிரயத்தனத்தின் பின் விடுவித்த கதையும் உண்டு..
இவ்வாறு பல சம்பவங்கள்...


நான் உங்களை discourage பண்ணவில்லை. ஆனாலும், எங்கள் கதைகளை எங்களுக்கே திரும்ப சொல்வதாலும் எங்களுக்குள் கதைத்துக் கொள்வதாலும் எங்கள் உணர்வுகளுக்கு ஒரு ஆறுதலாக இருக்குமே தவிர வேறு ஏதும் பயன் இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே.

அதே நேரம் இவைகள் பதியப்பட வேண்டிய வலிகள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.. சொல்லும் விதத்தை/பாணியை மாற்ற முடிந்தால் நன்று..

கோவையூரான் said...

வணக்கம் அம்மணி!
வருகைக்கு நன்றி

சொல்லும் விதத்தை/பாணியை மாற்ற முடிந்தால் நன்று..


புரியவில்லை ! புரியும்படி கூறுங்கள்.

உங்களை நான் இலகுவில் அடையாளம் காண உதவியதே உங்களது எழுத்துப் பாணிதான்.
அதேபோல் எனக்கும் ஒரு பாணி நிச்சயமாக இருக்கும். சரியோ தவறோ அதை நான் மாற்ற முடியாதென நினைக்கிறேன்.