தமிழனின் தனித்துவம் தொலைந்துபோகிறது !

Wednesday, August 22, 2007 - - 2 Comments


இலங்கைத் தமிழ்மாணவர்களின் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சிறிலங்கா அரசின் தீவிர இராணுவ நடவடிக்கைளால் இரண்டு லட்சத்திற்க்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்து கற்க முடியாத நிலையில் இடம் பெயர்ந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் கடந்த இரண்டுவருடங்களில் மட்டும் இந்த நிலை இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தற்போதைய அரசாங்தத்தின் தீவிர யுத்த முன்னெடுப்புகளின் காரணமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மட்டும் பலஆயிரக்கணக்கான மாணவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாகவும், பலஆயிரக்கணக்கான மாணவர்கள் கட்த்தப்படுக்காணாமல் போயுள்ளதாகவும், அத்தோடு பல மாணவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர் எனவும், பலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை என்னவோ உண்மைதான். ஆனால் வெறுமனே அறிக்கைகள் மட்டும் பிரச்சினைகளுக்கத் தீர்வாகப்போவதுமில்லை. தீர்வுக்கான வழியை கூறப்போவதுமில்லை.
ஒரு இனத்தின் வளர்ச்சியை முடக்குவதென்பது அந்த இனத்தின் கல்விக்கான வழியை அடைப்பதன் மூலமே சாத்தியப்படும். அந்தவகையில் இலங்கை அரசு இந்தப்பணியை செவ்வனே செய்துவருகிறது.
ஐ.நா வின் அறிக்கையின் படி நோக்குவோமானால் தமிழ்ச் சந்ததியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போபவர்களில் இரண்டு லட்சம் பேர் தமது இலட்சியங்களைத் தொலைத்துவிட்டு, அல்லது தாமே தொலைந்து போய் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலமை நீடிக்குமாயின் தமிழர்கள் தமது தனித்துவத்தை, அடையாளத்தை தொலைத்துவிட்டு தலைநிமிர்ந்து வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
தமிழன் தான் இழந்துள்ள ஒவ்வொன்றையும் என்றோ ஒருநாளில் திரும்பப்பெறுவான். ஆனால் கல்வி என்பது குறிப்பிட்ட வயதுக் காலப்பகுதியிலேயே சாத்தியப்படும். அதனை பின்நாளில் பெற்றுக் கொள்ள முடியாது.
எனவே எமது சந்ததியின் எதிர்காலம் குறித்து இப்போதைக்கு கவலைப்படுவதைத்தவிர வேறெதுவும் செய்யமுடியாது என நினைக்கிறேன்.
இருந்தாலும் ஒருவிடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப் படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது தமிழ் மக்களுக்கு கல்விரீதியில் ஏற்படுத்தப்பட்ட புறக்கணிப்பேயாகும். அதே தவறையே தொடர்ந்து செய்யும் பெரும்பான்மை இனம், இவற்றுக்கெல்லாம் பதில் கூறப்போகும் நாள் வெகு தூரத்திலில்லை.

This entry was posted on 2:42 AM You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

Anonymous said...

// ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப் படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது தமிழ் மக்களுக்கு கல்விரீதியில் ஏற்படுத்தப்பட்ட புறக்கணிப்பேயாகும். அதே தவறையே தொடர்ந்து செய்யும் பெரும்பான்மை//

இக்கருத்தை யாராலும் மறுக்கமுடியாது

Anonymous said...

உமது ஆக்கங்கள் தொடர்ந்து வர எனது ஆசிகள்.