தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை

Sunday, August 19, 2007 - - 17 Comments


கொழும்பில் தமிழர்கள் எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கிறார்கள் என கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் நிகழ்வு ஒன்றில் ஏராளமான தமிழர்கள் நேற்றைய தினம் கலந்து கொண்டனர். சூரியன் fm வானொலியின் ஏற்பாட்டில் தென்னிந்தியக் கலைஞர்களும், நம்மூர் கலைஞர்களும் பங்குகொள்ளும் இசைநிகழ்ச்சி ஒன்று நேற்று இரவு கொட்டாஞ்சேனை இரத்தினம் மைதானத்தில் இடம்பெற்றது.மைதான வாயிலில் பாதுகாப்புப் படையினரின் உடற் சோதனை இடம்பெற்றது. தமிழர்களால் தமிழர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இத்தகைய சோதனையின் அவசியம் என்ன என்பது எனக்கு அப்போது விளங்கவில்லை. வானவேடிக்கைகளுடன் விழா ஆரம்பமானது. ஆரம்பிக்கப்பட்ட வேளையிலிருந்து அறிவிப்பாளர்களின் வாயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த வாசகம் “ஐக்கிய தேசியக் கட்சியின் வடகொழும்பு அமைப்பாளர் துமிந்ந சில்வா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இசை நிகழ்ச்சி” என்றவாறு இருந்தது. அப்பொதுதான் எனக்கு வாயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உடற்சோதனையின் காரணமும், மைதானத்துக்கு வெளியே சுவரெங்கும் ஒட்டப்பட்டிருந்த துமிந்ந சில்வாவின் படம் பொறித்த சுவரொட்டிகளின் காரணமும் விளங்கியது.
ஆக ஐக்கியதேசியக் கட்சியின் பிரச்சார நிகழ்வு ஒன்றுக்கு இசைநிகழ்ச்சி என்ற பெயரில் கூட்டம் சேர்த்து தமிழர்களை கேணையர்களாக்கியுள்ளது சூரியன் fm என்பது தெட்டத்தெளிவாகியுள்ளது.
முதலில் இத்தைய ஒரு காலகட்டத்தில், அதாவது இலங்கையின் எதோ ஒரு மூலையில் தமிழன் நிர்க்தியாக்கப்பட்டுள்ள வேளையில் இவ்வாறான ஒரு கேளிக்கை நிகழ்ச்சி அவசியம்தானா? சரி கொழும்புத் தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற ஓர் இசைவிருந்தாக எடுத்துக் கொண்டாலும் அது தமிழ்க் கலாச்சாரத்துக்கு மதிப்பளிக்கும் நிகழ்வாக அமைந்திருந்ததா? இல்லை. முற்று முழுதாக பெரும்பான்மையினரின் கலாச்சாரம் திணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது. சிங்களப் பாடகி ஒருவர் கலந்து கொண்டு சில பாடல்களைப் பாடியிருந்தார். பாடியது மட்டுமல்லாது தமது நாறல் கலாச்சாரத்துக்க ஏற்றவாறு தனது அசைவுகளை அழகாக காட்டிவிட்டுப் போயிருந்தார். இவருக்கு “நெருப்புப் பெண்” என அறிவிப்பாளர்கள் புகழாரம் வேறு சூடியிருந்தார்கள். இதுமட்டுமல்லாது பாடல்களுக்கு நடனமாடுவதற்கு அரைகுறை ஆடைகளுடன் சிங்களப் பெண்கள் இறக்கப்பட்டிருந்தார்கள். இவர்களும் தமது அங்க லாவண்யங்களை குறைவில்லாமல் காட்டிச் சென்றிருந்தார்கள். தமிழர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கு இத்தகைய கலாச்சார சீர்கேடுகள் அனுமதிக்கப்பட்டிருந்தமை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதே வேளை தமிழர்களின் கலாச்சார விழுமியங்களை வெளிப்படுத்தும் ஓர் நிகழ்ச்சியாக அமைந்திருப்பின் வரவேற்கப்பட வேண்டியதாக இருந்திருக்கும்.
அவ்வாறெனில் கொழும்புத் தமிழ் ஊடகங்கள் எவ்வாறன நிகழ்ச்சிகளை நடாத்தமுடியும் எனும் கேள்வி எழலாம். உண்மைதான் அவற்றால் போராட்ட உணர்வை தூண்டக்கூடிய எந்த நிகழ்ச்சியையும் துணிந்து கொழும்மில் நடாத்த முடியாதுதான். ஆனால் தமிழ் உணர்வையும், மொழிப்பற்றையும், கலாச்சார மேம்பாட்டையும் வளர்க்க கூடிய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தடையேதுமில்லையே.
அதைவிடுத்து இத்தகைய கீழ்த்ரமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தமிழ் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பது முற்றிலும் தவறான ஒன்றாகும்.ஒவ்வொரு தமிழனினுள்ளும் தான் சார்ந்துள்ள இனம் சார்பான ஒரு உணர்வு மறைந்து கிடக்கிறது. எனவே ஊடகங்கள் என்ற வகையில் அதனை வெளிக்கொணர வேண்டியது பொறுப்புள்ள ஊடகங்களின் கடமையாகும். தமிழன் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழன் சொந்த மண்ணிலேயே அகதி ஆக்கப்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை, இந்த நிலமை நீடிக்குமாயின் தமிழ்ச் சந்ததியின் எதிர்காலம் போன்ற விடயங்களை அலசுவதன் மூலம் தமிழர்களின் மனதில் உணர்ச்சி விதைகளை தூவுவதை விடுத்து, அரசியல் வாதிகளின் அற்பசொற்ப சலுகைகளுக்காக தமிழர்களின் மானத்தை அடகுவைத்து, பெரும்பான்மை இன கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் நாடத்தப்பட்ட விழாவில் மக்களை கலந்துகொள்ளத் தூண்டிய சூரியன் fm இன் செயற்பாடு தமிழ்ப்பற்றாளர்களை பெரிதும் பாதித்துள்ளது.இத்தகைய ஊடகங்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

This entry was posted on 2:35 AM You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

Anonymous said...

தங்கள் கூற்றை நானும் ஆமோதிக்கின்றேன்.
சம்மந்தப்பட்டவர்கள் திருந்தினால் தவிர இதற்கு ஒரு தீர்வு இல்லை.கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் தங்கள் பிரமாண்டத்தையும் புகழையும் தீர்மானிக்கும் என எண்ணுபவர்கள் இருக்கும் வரை நாம் ஒன்றும் செய்யமுடியாது.

கானா பிரபா said...

வணக்கம் கோவையூரான்

தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கின்றேன். இயலுமானால் எழுத்துக்களின் அளவைக் கொஞ்சம் பெரிதாக்கி, பந்தி பிரித்துத் தாருங்கள். வாசிக்க இலகுவாக இருக்கும்.

பகீ said...

என்ன பூதக்கண்ணாடியா வச்சு வாசிக்கிறது. எழுத்தை பெரிசாக்குங்க அப்பு. அப்புறமா வலைப்பதிவுலகத்துக்கு வந்து சேந்ததுக்கு வாழ்த்துக்கள்.

கோவையூரான் said...

//கானா பிரபா said...
வணக்கம் கோவையூரான்//

வணக்கம் அண்ணா !
தங்கள் வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி. எழுத்துக்களை சற்றுப் பெரிதாக்கியுள்ளேன். தற்போது தெளிவாயிருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்தும் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள்.
நன்றி.

கோவையூரான் said...

//பகீ said...
என்ன பூதக்கண்ணாடியா வச்சு வாசிக்கிறது.//

வணக்கம் தலைவா !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இனி பூதக்கண்ணாடி தேவைப்படாது என நினைக்கிறென்.
நன்றி.

Anonymous said...

hi i also accept.
i expect ur new publish in commin days.

Anonymous said...

un velayai paarthu kondu iru.. matthavanda oothaya soriyirathai vittittu.. unnaala mudinja uthaviyai poraattathuku seiya paaru..

Anonymous said...

ei desathai pattrium viduthalai poraatathia pattrium kathaikira nee enna seithaai?


sooriyan thamil makkalukku seitha 1000 kanakkaana uthavikal unakku theriuma?

sooriyan fan

Anonymous said...

nghlh ntiyaj;j ntq;fhak;. Ciuj; jpUj;j ntspf;fpl;Ll;lhu;.

Anonymous said...

sooriyan is the best and the pet of all tamils in sri lanka.. shut up ur big nasty mouth..

பகீ said...

அங்க ஒரு ஆள் சிங்கம் எண்டுது. இங்க நீங்க தலைவா எண்டுறீங்க

என்ன நடக்குது????

Anonymous said...

வணக்கம் கோவையூரான்

தொடர்ந்து எழுதுங்கள்...
தமிழன் இனப்பற்றை வெளிப்படுத்த வேண்டிய நேரமிது.

Anonymous said...

வணக்கம் கோவையூரான்...

தங்களின் பதிவுகளில் தமிழ் மணத்துடன் யாழ் இந்து மணமும் சேர்ந்து வீசுகிறது போல..... எம்மை நசுக்குபவர்களுக்கு எழுத்துகளூடாகவும் வியூகம் வகுக்கவேண்டும்.

//

சபாஷ் சரியான வழி

//

பதிவுகளை மேலும் மெருகூட்டுங்கள்

Anonymous said...

naatai thiruthura nallavar ivar thaanam

கோவையூரான் said...

வணக்கம் தேவா!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவையூரான் said...

வணக்கம் பிரசாத்(G.P)!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்தும் வாருங்கள்.

தங்க முகுந்தன் said...

ஊடகங்கள் எப்போது நியாயமாக நடந்து கொள்ளுகின்றனவோ அன்றைக்குத் தான் தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் ஏற்படும் என நான் நினைக்கின்றேன். எல்லா ஊடகங்களும் தம்மை வளர்க்கச் செய்திகள் போடுகின்றனவே தவிர மக்களின் எதிர்காலம் நன்மை கருதி வெளியிடவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நிறைய உண்டு.